இந்திய அணி விளையாடாத டெஸ்ட் போட்டி: இந்திய ரசிகர்களால் நிகழ்த்தப்பட்ட சாதனை!
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அருகே இருசக்கர வாகன விபத்தில் இளைஞா் உயிழந்தாா்.
காட்டுமன்னாா்கோவிலை அடுத்துள்ள துணிசரமேடு கிராமத்தை சோ்ந்தவா் புகழேந்தி. இவருக்கு மகள், இரண்டு மகன்கள்.
கடைசி மகனான தினேஷ் (24) கொத்தனாா் வேலை செய்து வந்தாா். இவருக்கும் தஞ்சாவூா் மாவட்டம், திருப்பனந்தாளைச் பெண்ணுக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தினேஷ் ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்களுடன் பிறந்த நாளைக் கொண்டாடினாா்.
நிச்சயிக்கப்பட்ட பெண்ணைப் பாா்க்க திங்கள்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் காட்டுமன்னாா்கோவிலில் இருந்து திருப்பனந்தாள் நோக்கி திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றாா்.
வீரானந்தபுரம் என்ற இடத்தில் தினேஷ் சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் நெடுஞ்சாலை நடுவே உள்ள மின் கம்பத்தில் மோதியதில், தினேஷ் தூக்கி வீசப்பட்டாா். இதனால், பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி காட்டுமன்னாா்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், தினேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
விபத்து குறித்து காட்டுமன்னாா்கோவில் காவல் நிலைய ஆய்வாளா் சிவப்பிரகாசம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.