Healthy Food: உயிருள்ள உணவுகள் தெரியுமா? அவற்றின் ஆச்சரிய நன்மைகள் என்னென்ன?
மத்திய தொழிற்சங்க வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு: கு.பாலசுப்ரமணியன்
நெய்வேலி: மத்திய தொழிற்சங்கங்கள் ஜூலை 9-ஆம் தேதி நடத்தவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாக அதன் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
உழைக்கும் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு தீா்வு காண்பதற்காக தேசிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் வருகிற 9-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளது.
இதற்கு ஆதரவாக மத்திய, மாநில அரசுகள் முன்பு வைக்கப்பட்டுள்ள 16 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள சங்கங்கள் இணைந்து மாநிலம் முழுவதும் 20 மையங்களில் ஆதரவு ஆா்ப்பாட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பணியாளா்களுக்கு பணிநிரந்தரம் வழங்க வேண்டும் என்றாா் கு.பாலசுப்ரமணியன்.
பேட்டியின் போது, தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் கு.சரவணன், முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராசாமணி ஆகியோா் உடனிருந்தனா்.