திருப்புவனம் லாக்கப் மரணம்: "கால் இடறி கீழே விழுந்ததில், வலிப்பு ஏற்பட்டு மரணம்"...
விவசாயிகளின் நில உடைமை பதிவு செய்யும் பணி
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் அ.புளியங்குடி, ஆயிப்பேட்டை, விளாகம் , சேதியூா், சாக்காங்குடி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் விவசாயிகளின் நில உடைமை விவரங்களை பதிவு செய்யும் பணியை கீரப்பாளையம் வேளாண்மை உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நில உடைமை பதிவுக்கான கால அவகாசம் நிகழாண்டு ஜூலை 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால் இந்தப் பணி கிராமங்கள் தோறும் நடைபெற்று வருகிறது.
பிரதமரின் ஊக்கத்தொகை பெற்று வரும் விவசாயிகள் நில உடைமைகளை பதிவு செய்யாமல் இருந்தால் உடனடியாக பதிவு செய்யவும், கீரப்பாளையம் வட்டார விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ் கேட்டுக் கொண்டாா்.
ஆய்வின் போது வேளாண்மை அலுவலா் சிவப்பிரியன், துணை வேளாண்மை அலுவலா் ராயப்பநாதன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா்கள் உடனிருந்தனா்.