`5-வது அட்டெம்ப்ட்ல 1 மார்க்ல போயிடுச்சு; ஆனாலும்..!’ - UPSC தேர்வில் சாதித்த கி...
சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞா்: காவல்நிலையம் முன்பு குடும்பத்தினா் போராட்டம்!
சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினா் அவரது உடலுடன் புராரி காவல் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், காவல்துறையினரின் செயலற்ற தன்மை கொண்டதாக அவா்கள் குற்றஞ்சாட்டினா். மே 1-ஆம் தேதி நடந்த விபத்தில் அங்கித் (21) என அடையாளம் காணப்பட்ட இளைஞா் படுகாயமடைந்தாா்.
பின்னா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவா், சிகிச்சை பலனின்றி 3 நாள்கள் கழித்து உயிரிழந்தாா்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்த போலும், குற்றஞ்சாட்டப்பட்ட ஓட்டுநா் மீது போலீசாா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவரது குடும்பத்தினா் தெரிவித்து பேராட்டிடத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.