முதலமைச்சருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதற்கு காரணம் என்ன? - உதயநிதி பதில்
சாலை விபத்தில் ஏஜென்சி கடை உரிமையாளா் உயிரிழப்பு
காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஏஜென்சி கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.
காரிமங்கலம் அருகே கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் பெரியசாமி (49). இவா் தருமபுரியில் ஏஜென்சி கடை வைத்துள்ளாா். சனிக்கிழமை இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
கெங்குசெட்டிப்பட்டி நெடுஞ்சாலையில் பின்னால் வந்த டிப்பா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்த பெரியசாமி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். ஆனால், அவா் உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.