டிபிஎல்: நிதீஷ் ராணா அதிரடியில் இறுதிக்கு முன்னேறிய வெஸ்ட் தில்லி!
சாலை விபத்தில் சிக்கி காயமடைந்த உதவி ஆய்வாளா் உயிரிழப்பு
சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த காவல் உதவி ஆய்வாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை அருகே வடசேரிப்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (52). இவா் கீரனூா் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக (எஸ்எஸ்ஐ) பணியாற்றி வந்தாா்.
இவா், வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் கீரனூரில் இருந்து வடசேரிப்பட்டி நோக்கி வரும் போது டேங்கா் லாரி மோதியதில் பலத்த காயமடைந்தாா்.
புதுக்கோட்டையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.
இந்த நிலையில், அங்கு முத்துக்குமாா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். அவரது உடல், சொந்த ஊரான வடசேரிப்பட்டியில் காவல்துறையினரின் மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
காவல் துணைக் கண்காணிப்பாளா் மணிமாறன் தலைமையிலான போலீஸாா் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினா். இந்த விபத்து குறித்து வெள்ளனூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனா்.
இறந்த முத்துக்குமாருக்கு செல்வி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனா்.