சாலை விபத்தில் மின்வாரிய ஊழியா் உயிரிழப்பு
பொன்னமராவதி அருகே சாலையோர புளியமரத்தின் மீது இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியா் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பொன்னமராவதி அருகே உள்ள செவலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ம.செல்வகுமாா்(32). இவா் குழிபிறை மின்வாரிய அலுவலகத்தில் வணிக உதவியாளராக பணியாற்றி வருகிறாா். இவா் ஞாயிற்றுக்கிழமை காரையூரிலிருந்து செவலூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அரசமலை அருகே சாலையோரம் உள்ள புளியமரத்தின் மீது அவரது வாகனம் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த காரையூா் போலீஸாா், செல்வகுமாரின் உடல மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனா்.