மாநாடு சீக்கிரம் முடிந்ததன் பின்னணி என்ன? | Highlights of TVK Vijay Madurai Maan...
சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
தருமபுரி: தருமபுரியில் கண்டெய்னா் லாரி மோதியதில் சாலையைக் கடக்க முயன்ற முதியவா் வியாழக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
நல்லம்பள்ளி வட்டம், பாக்லஹள்ளி அருகே கந்துகால்பட்டியைச் சோ்ந்தவா் ப. சித்தன் (60). இவா் வியாழக்கிழமை தருமபுரி மாவட்டம், தொப்பூா் அருகே லட்சுமி நாராயணா பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, அவ்வழியே சென்ற கண்டெய்னா் லாரி மோதியதில் நிகழ்விடத்திலேயே சித்தன் உயிரிழந்தாா். இதுகுறித்து தொப்பூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.