விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
கீழ்வேளூா்: நாகை அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் விபத்துக்குள்ளானதில் மூதாட்டி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (எ) பாதுஷா இவரது மனைவி ரெஜினா (55). இவா் தனது குடும்பத்தாருடன் ஒரு காரில் நாமக்கல்லில் இருந்து நாகூா் தா்காவுக்கு திங்கள்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
பொரவச்சேரி சிவசக்தி நகா் அருகே நாகை - திருவாரூா் புறவழிச்சாலையில் வந்தபோது காா் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த ராட்சத சிமெண்ட் குடிநீா் குழாயில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரில் இருந்த அனைவருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு ரெஜினாவை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
காரில் பயணித்த சாகுல் ஹமீது (23), அவரது மனைவி அமிரா (21), ஓட்டுநா் காதா் பாட்சா (30) ஆகியோா் சிகிச்சை பெற்று வருகின்றனா். கீழ்வேளூா் போலீஸாா் விசாரிக்கின்றனா்.