செய்திகள் :

சிஎஸ்கேவுக்கு எதிரான 17 ஆண்டு சோகத்தை மாற்றுமா ஆர்சிபி?

post image

18-ஆவது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச்.22-இல் தொடங்கியது. இதில் ஆர்சிபி தனது முதல் போட்டியில் கேகேஆர் அணியை வென்றது.

சிஎஸ்கே அணி மும்பையை கடைசி ஓவரில் வென்றது. அடுத்ததாக சிஎஸ்கே, ஆர்சிபி அணி வரும் மார்ச்.28ஆம் தேதி மோதவிருக்கிறது.

சேப்பாக்கில் ஐபிஎல் தொடங்கிய ஆண்டு மட்டுமே சிஎஸ்கேவை ஆர்சிபி தோற்கடித்துள்ளது.

தற்போது, 17 ஆண்டுகளாக தோல்வியில் இருக்கும் ஆர்சிபி சிஎஸ்கேவை வீழ்த்துமா என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

சிஎஸ்கே சுழலை சமாளிக்குமா ஆர்சிபி?

2008இல் விளையாடிய வீரர்களில் தற்போதைய ஆர்சிபி அணியில் விராட் கோலி மட்டுமே இருக்கிறார்.

சிஎஸ்கே அணியில் ஜடேஜா, அஸ்வின், நூர் அஹ்மது என ஸ்பின் டிரையோ இருக்கிறார்கள்.

ஆப்கன் வீரர் நூர் அஹமது முதல் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.

இந்த மூவர்கள் 11 ஓவர்களில் 70 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

ஆர்சிபி பேட்டர்கள் கோலிக்கு உதவ வேண்டும்

சேப்பாக்கம் பிட்ச்சுக்கு ஏற்றமாதிட்ரி ஆர்சிபி அணியில் மாற்றம் வேண்டுமென வாட்சன் கூறியிருந்தார்.

கோலி ம்ட்டுமே விளையாடினால் போதாது. சால்ட், கேப்டன் படிதார், லியாம் லிவிங்ஸ்டன், ஜிதேஷ் சர்மாவும் பங்களிக்க வேண்டும்.

டிம் டேவிட்டுக்குப் பதிலாக ஜேகோப் பெத்தேல் அணியில் எடுத்தால் சாதகமாக இருக்கமால் எனக் கணிக்கப்படுகிறது.

சிஎஸ்கே மிடில் ஆர்டர் பிரச்னை

சிஎஸ்கே அணியில் மிடில் ஆர்டர் சொதப்பலாக இருக்கிறது. ஷிவம் துபே, தீபக் ஹூடா, சாம் கர்ரன் மோசமாக விளையாடி வருகிறார்கள்.

பதிரானா சந்தேகம்

பதிரானாவும் காயம் காரணமாக முழுமையாக குணமடையாமல் இருக்கிறார். அதனால் அதையும் சிஎஸ்கே அணி சிந்திக்க வேண்டியுள்ளது.

பதிரானா விளையாடினால் நாதன் எல்லிஸ் வெளியேற்றப்படுவாரென எதிர்பார்க்கப்படுகிறது.

திட்டங்களை தெளிவாக செயல்படுத்திய மும்பை இந்தியன்ஸ்; பாராட்டிய நியூசி. வீரர்!

மும்பை இந்தியன்ஸ் அதனுடைய திட்டங்களை தெளிவாக செயல்படுத்தி முதல் வெற்றியைப் பெற்றுள்ளதாக நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பாராட்டியுள்ளார்.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்ற நேற்றையப் ப... மேலும் பார்க்க

ஒவ்வொரு போட்டியிலும் 1% முன்னேற விரும்புகிறேன்: அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடும் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ரஷ்தீப் சிங் சுய விமர்சனத்தை செய்துகொண்டு ஒவ்வொரு போட்டியிலும் 1 சதவிகிதம் முன்னேற வேண்டுமென விரும்புவதாக ஜியோ ஹாட்ஸ்டாருக்கு அளித்த பேட்... மேலும் பார்க்க

மதிய உணவு உண்ணாமல் விளையாடிய அஸ்வனி குமார்..! பாண்டியாவின் அறிவுரையால் கிடைத்த விக்கெட்!

அறிமுகப் போட்டி என்பதால் மதிய உணவு உண்ணாமலே விளையாடியதாக ஆட்ட நாயகன் விருது வென்ற இளம் மும்பை வீரர் அஸ்வனி குமார் பேசியுள்ளார்.ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயி... மேலும் பார்க்க

மும்பை அணியில் இளம் வீரர்கள் தேர்வு குறித்து பேசிய ஹார்திக் பாண்டியா!

ஐபிஎல் 18ஆவது சீசனின் 12ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்ட 117 என்ற இலக்கினை 12.5 ஓவர்களில் வென்று அசத்தியது. இந்தப் போட்டியில் மும்பை சார்பாக அறிமுகமான அஸ்வினி குமார் 4 விக்கெ... மேலும் பார்க்க

அஸ்வனி, ரயான் அபாரம்; மும்பைக்கு முதல் வெற்றி

ஐபிஎல் போட்டியின் 12-ஆவது ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸை திங்கள்கிழமை வெற்றி கண்டது. முதலில் கொல்கத்தா 16.2 ஓவா்களில் 116 ரன்களுக்... மேலும் பார்க்க

அறிமுகப் போட்டியில் அசத்திய இளம் வீரர்; 116 ரன்களுக்கு ஆட்டமிழந்த கேகேஆர்!

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 116 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.ஐபிஎல் தொடரில் மும்பை வான்கடே திடலில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் மும்பை இந்திய... மேலும் பார்க்க