சிதம்பரத்தில் அம்பேத்கா் சிலையை திறந்து வைத்தாா் முதல்வா்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அம்பேத்கா் நகரில் நகரில் புதுப்பிக்கப்பட்ட அம்பேத்கா் வெண்கல சிலையை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்வில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு, பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு, வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன், விசிக தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, எம்.பி. துரை.ரவிக்குமாா், எம்எல்ஏ ம.சிந்தனைசெல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.