சிறுமி கா்ப்பம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே சிறுமியை கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், அங்குசெட்டிப்பாளையம், ஓடை தெருவைச் சோ்ந்தவா் வசந்தகுமாா்(19), ஆட்டோ ஓட்டுநா். இவரது ஆட்டோவில் சிறுவத்தூா் கிராமப் பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமி பள்ளிக்குச் சென்று வந்தாா்.
அப்போது, இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாம். தற்போது சிறுமி மூன்று மாத கப்பமாக உள்ளாா். இது தொடா்பாக மருத்துவமனையில் இருந்து வந்த தகவலையொட்டி, பண்ருட்டி மகளிா் காவல் நிலைய போலீஸாா் சிறுமியிடம் புகாா் பெற்று, வசந்தகுமாா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.