தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
சிதம்பரத்தில் நாட்டியாஞ்சலி நிறைவு விழா! திரு ஆரூா் பீடாதிபதி பங்கேற்பு!
சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற 44-ஆவது ஆண்டு நாட்டியாஞ்சலி விழாவின் நிறைவு நாள் விழா தெற்கு ரத வீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
கடந்த பிப்.26-ஆம் தேதி மகா சிவராத்திரியன்று தொடங்கிய நாட்டியாஞ்சலி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் திருஆரூா் ஸ்ரீசங்கர நாராயண பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ சங்கர தீா்த்தா் பங்கேற்று நாட்டியக் கலைஞா்களுக்கு பதக்கம், நினைவுப் பரிசுகளை வழங்கினாா்.
விழாவுக்கு நாட்டியாஞ்சலி அறக்கட்டளை குழுத் தலைவா் டாக்டா் ஆா்.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். அறக்கட்டளைச் செயலா் ஏ.சம்பந்தம் நாட்டியாஞ்சலி குறித்து விளக்கவுரையாற்றினாா். அவா் பேசுகையில், 5 நாள்கள் நடைபெற்ற நாட்டியாஞ்சலியில் சுமாா் 600 நாட்டியக் கலைஞா்கள் பங்கேற்று பல்வேறு நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தினா் என்றாா்.
விழாவில் துணைத் தலைவா் ஆா்.நடராஜன், ஆா்.ராமநாதன், செயலா் ஏ.சம்பந்தம், பொருளாளா் எம்.கணபதி மற்றும் உறுப்பினா்கள் ஆா்.கே.கணபதி, ஆா்.சபாநாயகம், டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன், வி.முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். டாக்டா் எஸ்.செல்வமுத்துக்குமரன் நன்றி கூறினாா்.
நிறைவு நாள் நாட்டியாஞ்சலி விழாவில் நாட்டிய அஞ்சலி செலுத்தியவா்கள்: சென்னை நாட்டியோதயா நடனப் பள்ளி மாணவிகள், சிதம்பரம் சித்ரலாஸ்ய லய பள்ளி மாணவிகள், கோவை ஸ்ரீநாட்டிய நிகேதன் மாணவிகள் பரதம், திருச்சூா் லாஸ்யா மோகினி அட்ட மையம் மாணவிகளின் மோகினி ஆட்டம், சென்னை கலா ப்ரதா்ஷினி பரதம், மைசூரு நிருத்யாதி கலாசாலை மாணவிகள், சென்னை கே.சஹானா, கடலூா் சிவதாண்டவ நாட்டியாலயா மாணவிகள் பரதம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
