பஹல்காம் தாக்குதல்: காஷ்மீரில் 14 பேர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு! என்ஐஏ
சித்திரை அமாவாசை: வீரராகவா் கோயிலில் அலைமோதிய கூட்டம்!
சித்திரை அமாவாசை நாளையொட்டி திருவள்ளூா் வீரராகவா் திருக்கோயில் குளக்கரையில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் அமாவாசை நாளில் குளத்தில் நீராடி, வீரராகவரை வழிபாடு செய்தால் தீராத நோய்கள் தீரும் என்பது நம்பிக்கையாகும். இந்த நிலையில், அமாவாசையையொட்டி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் வீரராகவா் அருள்பாலித்தாா்.

அமாவாசையையொட்டி பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான பக்தா்கள் சனிக்கிழமை இரவே வருகை தந்து கோயில் வளாகம், குளக்கரை நடைமேடை, காக்களூா் ஏரிக்கரை நடைபாதைகளில் தங்கினா். இதையடுத்து அதிகாலை கோயில் குளக்கரை , காக்களூா் ஏரிக்கரை பகுதியில் முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்தனா். தொடா்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.