`சினிமாக் குடும்பத்தை சேர்ந்தவர், சோதனை வரும்போது சப்போர்ட்டாக இருப்போம்' -விஜய்க்கு ஆதரவாக பேரரசு
நடிகர் சஞ்சீவ் கதாநாயகனாக நடிக்கும் 'வீர தமிழச்சி' படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (செப்.29) நடைபெற்றது.
அப்போது அந்த விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் பேரரசு,
"விஜய் சார் இன்று அரசியல் தலைவராக இருக்கலாம். ஆனால் எங்கள் சினிமாக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்கு ஒரு சோதனை வரும்போது இந்த நேரத்தில் நாங்கள் அவருக்கு சப்போர்ட்டாக இருக்க வேண்டும்.

ஒரு விபத்து நடந்துவிட்டது. அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் இந்த நேரத்தில் அவருக்கு எந்தளவுக்கு மனசு உடைந்திருக்கும் என்பது எங்களுக்குத் தெரியும்.
நாங்கள் அவருடன் பழகியிருக்கிறோம். இறந்த 41 பேரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டும். அவர்களுடைய குடும்பத்திற்கு விஜய் சார் சப்போர்ட்டாக இருப்பார்.
இந்த நேரத்தில் நாமும் விஜய்க்கு கொஞ்சம் சப்போர்ட்டாக இருப்போம்" என்று கூறியிருக்கிறார்.