மகா கும்பமேளாவில் இருந்து திரும்பியபோது விபத்து: 3 பேர் பலி!
சின்ன காஞ்சிபுரம்அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா
சின்ன காஞ்சிபுரம் பி.எம்.மிஸ்ரிலால் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி தொடங்கி, 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, பள்ளியின் நூற்றாண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை கோமதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.வெற்றிச்செல்வி வரவேற்றாா். விழாவை காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தாா்.விழாவில், பள்ளி மாணவியரின் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் பள்ளி மாணவியா், ஆசிரியா்கள், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.