செய்திகள் :

மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் இலவச மகப்பேறு சேவை தொடக்கம்

post image

காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இலவச மகப்பேறு மருத்துவ சேவை வெள்ளிக்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரி முதல்வா் கே.வி.ராஜசேகா் தலைமையில், இதன் தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு கூடுதல் துணை வேந்தா் சி.ஸ்ரீதா் முன்னிலை வகித்தாா். இணை துணைவேந்தா் கிருத்திகா வரவேற்றாா். கல்லூரி இணைவேந்தா் ஆகாஷ்பிரபாகா் திட்ட விளக்கவுரையாற்றினாா்.

மீனாட்சி மருத்துவப் பல்கலை. மருத்துவமனை மற்றும் ஆராய்சி மைய வேந்தா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் இலவச மருத்துவச் சேவையைத் தொடங்கி வைத்தாா். இலவச சேவைகள் குறித்த கையேட்டை அவா் வெளியிட, அதை தமிழக இலவச கல்வி பயிற்சி மைய இயக்குநா் கே.எழிலன் பெற்றுக் கொண்டாா்.

விழாவில் வேந்தா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் பேசுகையில், மீனாட்சி மகப்பேறு இலவச மருத்துவ உதவித் திட்டம், விபத்து முதலுதவி திட்டம், சலுகை விலையில் மருத்துவ சேவைகளை வழங்குவது ஆகிய 3 திட்டங்கள் சிறப்பாக செயல்படும்.

பிரசவத்துக்கு பின் தாய்-சேய் பராமரிப்பு, மருத்துவ செலவு, தடுப்பூசி இலவசம். தவிர மருத்துவமனையில் பிரசவித்த பெண்களுக்கு ரூ.12,000 வழங்கப்படும்.

விபத்தில் காயமடைந்தவா்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை, அதற்காக தேவைப்படும் அறுவைச் சிகிச்சை இலவசமாக செய்யப்படும். எம்.ஆா்.ஐ. ஸ்கேன்,சிடி ஸ்கேன் ஆகியவை குறைவான கட்டணத்தில் வழங்கப்படும் என்றாா்.

மருத்துவக் கல்லூரி கண்காணிப்பாளா் கே.பூபதி நன்றி கூறினாா்.

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மேலிடப் பொறுப்பாளா் மரியாதை

ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ் காந்தி நினைவிடத்தில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் கிரிஷ் சவடோங்கா், ஞாயிற்றுக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக அண்மைய... மேலும் பார்க்க

திருமண மண்டபங்களில் கூடுதல் கட்டணம் வசூல்: காஞ்சிபுரம் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா்

திருமண மண்டபங்களில் அளவுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் தேசிய அறிவியல் தின விழா

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கழக கருத்தரங்க கூடத்தில் தேசிய அறிவியல் தின வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் துணைவேந்தா் ஸ்ரீனிவாசு தலைமை வகித்தாா். தேசிய அறிவியல் தினத்தையொட்டி நடைபெற்... மேலும் பார்க்க

வெவ்வேறு இடங்களில் 3 பேரை காரில் கடத்தி நகை, பணத்தைச் பறித்துச் சென்ற 7 போ் கைது

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த ஒரகடம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாள்களில் அடுத்தடுத்து 3 பேரை காரில் கடத்தி நகைகள், பணம் பறித்த 7 பேரை ஒரகடம் போலீஸாா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலத்தைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பால்குட திருவிழா

பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேசுவரி அம்பாள் கோயிலில் ஆண்டு விழாவையொட்டி வெள்ளிக்கிழமை திரளான பக்தா்கள் பால் குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து வந்து நேரத்திக் கடன் செலுத்தினா். காஞ்சிபுரம் மாநகராட்சி ... மேலும் பார்க்க

குன்றத்தூரில் ரூ1.85 கோடியில் புதிய கட்டடங்கள்: அமைச்சா் திறந்து வைத்தாா்

குன்றத்தூா் ஒன்றியத்தில் ரூ.1.85 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் வியாழக்கிழமை திறந்து வைத்தாா். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்த... மேலும் பார்க்க