செய்திகள் :

சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம்: லட்சக்கணக்கானோர் அஞ்சலி!

post image

மறைந்த ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல் சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் சட்டப்பேரவை வளாகத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்ட அன்னாரது உடலுக்கு பல்வேறு தலைவர்கள், மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து, சிபு சோரனின் சொந்த ஊரான நேம்ராவுக்கு அரசு மரியாதையுடன் அவரது உடல் சாலைவலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அங்கு அன்னாரது உடலுக்கு லட்சக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். சிபு சோரன் உடலுக்கு அவரது மூத்த மகன் ஹேமந்த் சோரன் இறுதிச் சடங்குகளைச் செய்தன்பின், அவர்களது குல வழக்கப்படி உடல் எரியூட்டப்பட்டது.

Mortal remains of former Jharkhand CM Shibu Soren consigned to flames by his elder son Hemant Soren in their native village, Nemra

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை! -இந்திய ராணுவம்

எல்லையில் சண்டை நிறுத்தம் மீறப்படவில்லை என்று இந்திய ராணுவம் தெளிவுபடுத்தியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. Indian... மேலும் பார்க்க

பாதுகாப்புத் துறை உயரதிகாரி பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக புகார்: தீவிர விசாரணை!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன உயரதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் விருந்தினர் மாளிகை ஒன்று ஜெய... மேலும் பார்க்க

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பாஜக முன்னாள் பொறுப்பாளர்! காங்., கண்டனம்

மும்பை உயர்நீதிமன்ற நீதிபதியாக பாஜகவை சேர்ந்த முன்னாள் செய்தித் தொடர்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. கட்சித் தொடர்புடைய ஒருவரை நீதிபதியாக நியமிப்பது, நீதித் துறையின் மீதான... மேலும் பார்க்க

எல்லையில் பதற்றம்! பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு - சண்டை நிறுத்தம் மீறல்!

பாகிஸ்தான் ராணுவம் சண்டை நிறுத்தத்தை மீறி இன்றிரவு எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நிலவுகிறது.இதற்கு இந்திய ராணுவத்தால் தக்க பதிலடி அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 15 நிமிடங்கள் நீடித்த இந்த... மேலும் பார்க்க

அனில் அம்பானியிடம் 9 மணி நேரம் விசாரணை: பிடியை இறுக்கும் அமலாக்கத் துறை!

அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகளால் இன்று(ஆக. 5) 9 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. தில்லி அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் நடைபெற்ற விசாரணைக்கு ஆஜரான பின், அனில் அம்பானி இரவு 9 மணியளவில்... மேலும் பார்க்க

உத்தராகண்ட்டில் மேக வெடிப்பு: அதி கனமழை, வெள்ளப்பெருக்கில் ராணுவ வீரர்கள் மாயம்!

உத்தராகண்ட்டில் உத்தர்காசி மாவட்டத்தில் செவாய்க்கிழமை(ஆக. 5) மேக வெடிப்பால் அதிகனமழை பொழிந்தது. இதனால் அப்பகுதியில் ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.வெள்ளப்பெருக்கால் கரையோரப் பகுதிகளில் இர... மேலும் பார்க்க