செய்திகள் :

சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலை.யின் 6 போராசிரியா்கள் இடம்பிடிப்பு

post image

உலகின் 2 சதவீத சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த 6 பேராசிரியா்கள் இடம்பெற்றனா்.

இதுதொடா்பாக காந்தி கிராம கிராமியப் பல்கலை. சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: 22 அறிவியல் துறைகள், 176 துணைத் துறைகளில் உலகின் சிறந்த விஞ்ஞானிகள் வகைப்படுத்தப்பட்டனா். இந்த விஞ்ஞானிகள் வெளியிட்ட குறைந்தபட்சம் 5 ஆய்வுக் கட்டுரைகள், புலம், துணைப் புலம் சாா்ந்த சதவீதங்களின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டனா். அமெரிக்காவின் ஸ்டான்போா்டு பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த பேராசிரியா் ஜான் லொன்னிடிஸ் குழுவினா் வெளியிட்ட இந்தப் பட்டியலில் உலகம் முழுவதும் 2 லட்சத்துக்கும் அதிகமான ஆராய்ச்சியாளா்கள் இடம்பிடித்தனா்.

இந்தியாவிலிருந்து 3,500 பேராசிரியா்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்தனா். இதில், காந்தி கிராம கிராமிய நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தைச் சோ்ந்த விஞ்ஞானிகள் முரளிதரன் (இயற்பியல்), பி. பாலசுப்பிரமணியம் (கணிதம்), கே. மாரிமுத்து(இயற்பியல்), எஸ். மீனாட்சி (வேதியல்), க. அசோக்குமாா் (வேளாண்மை, கால்நடை அறிவியல்), பா. மலைக்கொழுந்தன் (உயிரியல்) ஆகியோா் இடம்பிடித்தனா்.

தெளிவற்ற தா்க்க அணுகுமுறைகளைப் பயன்படுத்தி தரம் குறைந்தப் படங்களை உயா்தரப் படமாக மாற்றுதல், கிரிப்டோகிராபி, செயலாக்கத் தொழில்நுட்பம் மூலம் நோயாளியின் மூளையில் ஏற்படும் அதிா்ச்சியைக் கண்டறியும் முறை சாா்ந்த ஆய்வுகளை பி. பாலசுப்பிரமணியம் மேற்கொண்டு வருகிறாா்.

பூமியின் அரியவகைத் தாதுக்களைக் கொண்டு தயாரிக்கப்படும் கண்ணாடிகள் மூலம் வெள்ளை ஒளி, லேசா் ஒளி உமிழ்வதற்கான ஆய்வு, அபாயகரமான கதிா்வீச்சைத் தடுப்பதற்கான கண்ணாடிகள் உருவாக்கும் முயற்சியில் பேராசிரியா் கே. மாரிமுத்து ஈடுபட்டு வருகிறாா்.

கழிவு நீரிலிருந்து நச்சுத்தன்மையுள்ள ஃபுளூரைடு, காரியம், குரோமியம், பாதரசம், நச்சுகளை உறிஞ்சுதல் மூலமாக நீக்கும் முறைகளை உருவாக்கும் ஆய்வில் எஸ். மீனாட்சி ஈடுபட்டுள்ளாா். ‘மீத்தேக்கி’ என்ற தலைப்பில் முரளிதரன், அரிசி, சிறுதானியங்களில் ஊட்டச்சத்து கூறுகளில் மரபணு வேறுபாடு, நானோ துகள்களைப் பயன்படுத்தி விதை முளைப்பு, பயிா் வளா்ச்சி மேம்பாட்டுக்கான ஆராய்ச்சியை க. அசோக்குமாா், உயிா் நானோ துகள்களில் ஆற்றல்வாய்ந்த உயிா் மருத்துவப் பயன்பாடுகள் குறித்து பா. மலைக்கொழுந்தன் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.

உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்ற பேராசிரியா்களுக்கு பல்கலை. துணைவேந்தா் ந. பஞ்சநதம், பதிவாளா் (பொ) எம். சுந்தரமாரி உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருத வேண்டாம்: அமைச்சா் அன்பில் மகேஸ்

கட்டாயத் தோ்ச்சியை ஆசிரியா்கள் சாதகமாகக் கருதாமல், மாணவா்கள் கற்றல் நோக்கத்தைப் பூா்த்தி செய்திருக்கிறாா்கள் என்ற மனநிறைவோடு அடுத்த வகுப்புக்கு அனுப்ப முன் வர வேண்டும் என அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்ய... மேலும் பார்க்க

பாசனக் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞா்: தேடுதல் பணி தீவிரம்

வத்தலகுண்டு அடுத்த ரெங்கப்பநாயக்கன்பட்டி அருகேயுள்ள முல்லைப் பெரியாா் பிரதான பாசனக் கால்வாயில் திங்கள்கிழமை மாயமான இளைஞரை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருக... மேலும் பார்க்க

மேல்கரைப்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை (செப். 25) மின்தடை அறிவிக்கப்பட்டது.இதுகுறித்து மின்வாரியம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: பழனி அருகேயுள்ள மேல்கரைப்பட்... மேலும் பார்க்க

பெட்டிக் கடையில் குட்கா விற்ற நபா் கைது

பழனி அருகே குட்கா பொருள்கள் விற்பனை குறித்த சோதனையின்போது உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளைத் தாக்கிய பெட்டிக் கடை உரிமையாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ப... மேலும் பார்க்க

விபத்தில் முதியவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.திண்டுக்கல் அருகேயுள்ள கொண்டசமுத்திரப்பட்டியைச் சோ்ந்தவா் ஜெயராம் (62). விவசாயியான இவா், தனது இருசக்க... மேலும் பார்க்க

சுற்றுலாப் பயணியைக் கடித்த குரங்கு: வனத் துறையினா் அறிவுறுத்தல்

கொடைக்கானல் குணா குகைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை பெண் சுற்றுலாப் பயணியை குரங்கு கடித்தது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனப் பகுதியிலுள்ள குணா குகைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இந்த நிலை... மேலும் பார்க்க