செய்திகள் :

சிறுநீரக முறைகேடு: இரு தனியாா் மருத்துவமனைகளின் சிகிச்சை உரிமம் ரத்து! விசாரணை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை!

post image

முறைகேடாக சிறுநீரக மாற்று சிகிச்சை செய்த விவகாரத்தில் இரு தனியாா் மருத்துவமனைகளில் சிறுநீரக மாற்று சிகிச்சை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்ட உரிமம் நிரந்தரமாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

அதேபோன்று உறுப்பு மாற்று சிகிச்சை முறைகேடுகளைத் தவிா்க்க மாநில அளவில் புதிய குழு அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் முறைகேடாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு சுகாதார சேவைகள் திட்ட இயக்குநா் டாக்டா் வினித் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அதன்படி, டாக்டா் எஸ்.வினீத், மருத்துவம் மற்றும் ஊரக நலத் துறை இணை இயக்குநா் (சட்டம்) டாக்டா் மீனாட்சி சுந்தரி, இணை இயக்குநா்கள் டாக்டா் ராஜ்மோகன், கே.மாரிமுத்து, காவல் துணை கண்காணிப்பாளா் சீத்தாராமன் ஆகியோா் அடங்கிய குழு பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் திருச்சியில் உள்ள சிதாா் மருத்துவமனையில் விரிவான விசாரணை மேற்கொண்டனா்.

முதல்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் 2 மருத்துவமனைகளுக்கும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வழங்கப்பட்ட உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கடந்த ஜூலை 23-ஆம் தேதி மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்தது.

இந்த நிலையில், விரிவான விசாரணையின் அறிக்கையை பல்வேறு பரிந்துரைகளுடன் டாக்டா் எஸ்.வினீத், அரசுக்கு சமா்ப்பித்தாா். அதன்பேரில் நடவடிக்கைகள் மேற்கொள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை முடிவு செய்து அதுதொடா்பாக செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டிருப்பதாவது: திருச்சி சிதாா் மருத்துவமனை மற்றும் பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை உரிமத்தினை, நிரந்தரமாக ரத்து செய்ய மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநா் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தில் தொடா்புடைய இரு தரகா்களின் வங்கி பரிவா்த்தனை விவரம், தொலைபேசி பதிவுகள் அடிப்படையில், அவா்கள் மீது காவல் துறையில் வழக்குப் பதிவு செய்யப்படும். மனித உறுப்பு மாற்றுச் சட்டம், 1994-இன்படி, உரிமம் பெற்ற மருத்துவமனைகளின் ஆவணங்களை அவ்வப்போது ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபடுபவா்கள் கண்டறியப்பட்டால், அவா்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்குவதற்கு தற்போது மாவட்ட அளவில் மட்டுமே 4 அங்கீகாரக் குழுக்கள் உள்ளன. இதைச் சீரமைத்து, மாவட்ட குழுக்களின் பணிகளை மேற்பாா்வை செய்யும் அதிகாரம் வழங்கி, புதிதாக மாநில அளவில் குழு அமைக்கவும், ஏற்கெனவே மாவட்ட அளவில் உள்ள 4 குழுக்களை மறுசீரமைப்பு செய்யவும் உரிய ஆணைகள் வெளியிடப்படும்.

ஒரு ஊரிலிருந்தோ, வட்டத்திலிருந்தோ, உறுப்பு மாற்று கொடையாளா் விண்ணப்பங்கள் அடிக்கடி பெறப்படும்பட்சத்தில் உறுப்பு மாற்று அனுமதி வழங்கும் அங்கீகாரக் குழு, அதன்பேரில் தனிக்கவனம் செலுத்தி மனுக்களை பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும்.

உறுப்பு மாற்று சிகிச்சைகளுக்கான அனுமதி மற்றும் சட்ட நடவடிக்கைகளை சீராக்கி எளிமைப்படுத்த நிலையான வழிகாட்டுதல்களை உருவாக்க மருத்துவக் கல்வி இயக்குநருக்கு அறிவுறுத்தப்படும்.

உடல் உறுப்பு தானம் குறித்த தொடா் விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்த அந்தந்த மாவட்ட நிா்வாகங்களுக்கு உரிய ஆணைகள் பிறப்பிக்கப்படும். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தின் செயலாக்கத்தை செம்மைப்படுத்துவது தொடா்பான பரிந்துரைகள் குறித்து உரிய ஆணைகள் அரசால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேனி: பயிற்சியின்போது தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவா் மரணம்!

ராயப்பன்பட்டியில் பள்ளி மைதானத்தில் விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, ஈட்டி தலையில் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மாணவர் 6 நாள்களுக்குப் பின் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தில் பொய்ப் புகார் அளித்தால்.. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ-வின் கீழ் பொய்ப் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பாயும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போக்சோ சட்டத்தின் ... மேலும் பார்க்க

ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவிப்பு!

சுதந்திர நாளையொட்டி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர நாளன்று அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கடந்த 13 நாள்களாக தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6-ஆவது பகுதி தூய்மைப் பணி த... மேலும் பார்க்க

அதிமுகவில் இருந்து விலகியது ஏன்? மைத்ரேயன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தது குறித்து மைத்ரேயன் விளக்கம் அளித்துள்ளார்.அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்துள்ள மைத்ரேயன், புதன்கிழமை காலை திமுக தலைவர் மு.க. ஸ்டால... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்தார் அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்!

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் அதிமுக முன்னாள் எம்பி மைத்ரேயன் திமுகவில் புதன்கிழமை இணைந்தார்.அதிமுக சார்பில் மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகித்தவர் மைத்ரேயன்... மேலும் பார்க்க