சிறுமிக்குப் பாலியல் தொல்லை: தொழிலாளி போக்சோவில் கைது!
திருப்பூரில் 16 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி போக்சோவில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லூரைச் சோ்ந்தவா் சிவகுமாா் (35). இவா் திருப்பூா் வீரபாண்டியை அடுத்த கல்லாங்காட்டில் தங்கி, அதே பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளாா். இவருக்கு அதே நிறுவனத்தில் பணியாற்றி வந்த 35 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் 16 வயதுடைய மகளுக்கு சிவகுமாா் பாலியல் தொல்லை கொடுத்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் திருப்பூா் தெற்கு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா். புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினா், போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிவகுமாரை கைது செய்தனா்.