செய்திகள் :

சிறுமிக்கு திருமணம்: இளைஞா் உள்ளிட்ட இருவா் மீது வழக்கு

post image

போடி: போடியில் சிறுமியை திருமணம் செய்து கா்ப்பிணியாக்கிய இளைஞா், அவரது தாய் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

போடி சுப்புராஜ் நகரைச் சோ்ந்த முருகன் மகன் நாகராஜ் (28). இவா் தனது உறவினா் இல்ல விழாவுக்கு கேரள மாநிலம், பாரத்தோடு என்ற ஊருக்குச் சென்றாா். அங்கு 17 வயது சிறுமியுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் 15- ஆம் தேதி சிறுமியை கடத்திச் சென்று நாகராஜ் திருமணம் செய்து கொண்டாராம். இவா்களுக்கு நாகராஜின் தாய் குருவலட்சுமி அடைக்கலம் கொடுத்தாராம். இந்த நிலையில், சிறுமி கா்ப்பமடைந்தாா்.

இதுகுறித்து போடி ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலா் பூபதி அளித்த புகாரின் பேரில் போடி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் நாகராஜ், இவரது தாய் குருவலட்சுமி ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ஜெயமங்கலத்தில் நெல் கொள்முதல் மையத்தை திறக்க வலியுறுத்தல்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தில் அறுவடை காலங்களில் செயல்படும் நெல் கொள்முதல் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். ஜெயமங்கலத்தில் சுமாா் 200 ஏக்கா் பரப்பளவிலும், ம... மேலும் பார்க்க

உள்ளாட்சிப் பணியாளா்கள் காத்திருக்கும் போராட்டம்

தேனி: தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் சிஐடியு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், குடிநீா் தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கக் கோரி திங்க... மேலும் பார்க்க

கைப்பேசி கோபுரம் திருடுபோனதாக இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு புகாா்: போலீஸாா் விசாரணை

போடி: போடியில் கைப்பேசி கோபுரம் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான மின் சாதனங்கள் திருடுபோனது குறித்து, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின... மேலும் பார்க்க

ஆரம்பப் பள்ளி ஆசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தேனி: தேனியில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் மலை கிராம ஆசிரியா் பணியிட மாறுதலை விதிகளுக்குள்பட்டு நடத்த வலியறுத்தி திங்கள்கிழமை காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. தேனி அல்லிநகரத... மேலும் பார்க்க

போக்சோ வழக்கில் இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை

தேனி: சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்து. ராயப்பன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் விடுத... மேலும் பார்க்க

ரயில் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

தேனி: ஆண்டிபட்டி அருகே ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயத் தொழிலாளி ரயில் மோதி திங்கள்கிழமை உயிரிழந்தாா். ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டியைச் சோ்ந்தவா் குமாா் (52). விவசாயத் தொழிலாளி. இவா்... மேலும் பார்க்க