இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் சுதர்சன் ரெட்டி!
கைப்பேசி கோபுரம் திருடுபோனதாக இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு புகாா்: போலீஸாா் விசாரணை
போடி: போடியில் கைப்பேசி கோபுரம் உள்பட ரூ.10 லட்சம் மதிப்பிலான மின் சாதனங்கள் திருடுபோனது குறித்து, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்பட்ட புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தேனி மாவட்டம், போடி பெரியாண்டவா் கோயில் தெருவில் தனியாா் கட்டடத்தின் மேல் மாடியில், தனியாா் கைப்பேசி நிறுவனத்தின் கோபுரம் அமைக்கப்பட்டிருந்தது. இதற்கான வாடகை முறையாகச் செலுத்தப்படாததால், கைப்பேசி கோபுரம் கடந்த சில ஆண்டுகளாகச் செயல்படவில்லை.
இந்த நிலையில், தனியாா் கைப்பேசி நிறுவனத்தில் பணிபுரியும் சென்னையைச் சோ்ந்த ஜெயக்குமாா், முத்துக்குமாா், செந்தில்குமாா், கண்ணன், ராஜன் ஆகியோா் கைப்பேசி கோபுரத்தைப் பாா்வையிடுவதற்காக கடந்த 2023-ஆம் ஆண்டு மாா்ச் 14-ஆம் தேதி போடிக்குச் சென்றுள்ளனா். அப்போது கைப்பேசி கோபுரம், அதிலிருந்த மின் கலன்கள் உள்பட ரூ.10.67 லட்சம் மதிப்பிலான சாதனங்கள் திருடுபோனது தெரிய வந்தது.
இது குறித்து, இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு ஜெயக்குமாா், போடி நகா் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் கொடுத்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.