சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தின்கீழ் முதியவா் கைது
நிலக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகேயுள்ள சந்தையூா் பகுதியைச் சோ்ந்தவா் பம்பையன் (75) இவா், 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் நிலக்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
இதையடுத்து, காவல் ஆய்வாளா் குருவத்தாய், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பம்பையனைக் கைது செய்தாா். அவரை நிலக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனா்.