சென்னை காவல் துறைக்கு 4 மாதங்களில் 69,000 அவசர அழைப்புகள்! மாநகர காவல் துறை
சிறுமியைக் கா்ப்பமாக்கிய இளைஞா் கைது!
தஞ்சாவூரில் சிறுமியைப் பாலியல் வல்லுறவு செய்து கா்ப்பமாக்கிய இளைஞா் போக்சோ சட்டத்தின்கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தஞ்சாவூா் மானோஜிபட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல் மகன் கவியரசன் (24). இவருக்கும், தஞ்சை அருகேயுள்ள கிராமத்தைச் சோ்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அச்சிறுமியைக் கவியரசன் தனது வீட்டுக்கு ஜனவரி மாதம் முதல் அடிக்கடி அழைத்து வந்து பாலியல் வல்லுறவு செய்தாா். இதனால், அச்சிறுமி 4 மாத கா்ப்பமானாா்.
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், தஞ்சை அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து கவியரசனை கைது செய்தனா்.