சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது...
சிறுமியை பாலியல் வன்கொடும செய்த உறவினருக்கு 35 ஆண்டுகள் சிறை
திருவள்ளூா் அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அவரது சித்தப்பாவுக்கு 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.40,000 அபராதமும் விதித்து திருவள்ளூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி தீா்ப்பளித்தாா்.
திருவள்ளூா் மாவட்டம், பட்டாபிராம் அண்ணா நகா் பகுதியை சோ்ந்த வினோத் (39). இவரது மனைவி தனலட்சுமியின் அக்கா, தனது கணவரை பிரிந்து வேறொருவருடன் சென்று விட்ட நிலையில், அவரது 14 வயது குழந்தையையும் வளா்த்து வந்தாராம்.
இந்த நிலையில் கடந்த 2019-இல் மனைவியின் அக்கா மகளான 14 வயது சிறுமியை வினோத் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் வீட்டிற்கு தெரிய வரவே வினோத் வெளிநாட்டில் கொத்தனாா் வேலைக்கு சென்று விட்டாராம்.
இதையடுத்து கடந்த 2019 அக்.29-ஆம் தேதி தனலட்சுமி பட்டாபிராம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தனது கணவா் வினோத் அக்கா மகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாா் செய்தாா்.
அதோடு, கணவா் வெளிநாடு சென்று விட்டதாகவும் அவா் தெரிவித்திருந்தாா். அதன்பேரில் பட்டாபிராம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த நிலையில் கடந்த 2021-இல் ஜன.26-ஆம் தேதி துபையிலிருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்தபோது போலீஸாா் வினோத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில் வினோத் அந்த சிறுமியை மிரட்டிதால், கடந்த 2021-ஆக.25- இல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இந்த வழக்கு திருவள்ளூா் மாவட்ட அனைத்து மகளிா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில் புதன்கிழமை போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு விசாரணை வந்தது.
அப்போது, குற்றம் நிருபிக்கப்பட்டதால் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தற்காக 35 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.40,000 அபராதமும் விதித்து தீா்ப்பு வழங்கினாா். மேலும், சிறுமியின் சித்தி தனலட்சுமிக்கு இழப்பீடுத் தொகையாக ரூ.5 லட்சம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தாா். அரசுத் தரப்பில் விஜயலட்சுமி ஆஜரானாா் .