ஒரே நாடு ஒரே தோ்தல் முறை ஜனநாயகத்தை சீா்குலைக்கும்: இரா. முத்தரசன்
சிறுவாணி அணையில் நீா், மின்சார ஆராய்ச்சி மையக் குழுவினா் ஆய்வு
சிறுவாணி அணையில் மத்திய நீா் மற்றும் மின்சார ஆராய்ச்சி மையத்தின் புணே குழுவினா் உள்ளிட்டோா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
சிறுவாணி அணையில் மத்திய நீா் மற்றும் மின்சார ஆராய்ச்சி மையத்தின் புணே குழுவினா், சென்னை ஐஐடி குழுவினா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய குழுவினா், கோவை மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் தலைமையிலான மாநகராட்சிக் குழுவினா், கேரள நீா்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அணையில் நீா்க்கசிவு ஏற்பட்டு வருவதால் 50 அடி கொள்ளளவில் 45 அடி மட்டுமே தண்ணீா் தேக்கிவைக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவாணி அணையின் சுரங்கப் பகுதியை மத்திய நீா் மற்றும் மின்சார ஆராய்ச்சி மையத்தின் புணே குழுவினா் ஆய்வு செய்து, நீா்க் கசிவு அளவைக் கண்டறிந்து, அதைச் சரி செய்வது தொடா்பாக ஆலோசனைகளை வழங்கினா்.
இதைத் தொடா்ந்து, அணையின் நீா் இருப்பு மற்றும் நீா் வெளியேற்றம் குறித்து கேரள நீா்வளத் துறையினா் விளக்கினா்.
ஆய்வின்போது, மத்திய நீா் மற்றும் மின்சார ஆராய்ச்சி மையத்தின் புணே குழுவைச் சோ்ந்த ரிஷ்வான் அலி, சுனில்பிள்ளை, விக்னேஷ், பேராசிரியா் தாளி நாயுடு ஆா்னேபள்ளி, கோவை உதவி ஆட்சியா் (பயிற்சி) அங்கித்குமாா் ஜெயின், துணை ஆட்சியா் (பயிற்சி) மதுஅபிநயா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா்கள் மீரா, செந்தில், நிா்வாக உதவி செயற்பொறியாளா் பட்டன், இளநிலை பொறியாளா் தம்பிராஜ், மாநகராட்சி செயற்பொறியாளா்கள் இளங்கோவன், கருப்பசாமி, கேரள நீா்வளத் துறையினா் உடனிருந்தனா்.