கிருஷ்ணகிரியில் தாலியுடன் பள்ளி வந்த மாணவி: ஐந்து பேர் கைது!
சிறை தியாகிகள் நினைவு கொடியேற்று விழா!
சேலத்தில் சிறை தியாகிகள் நினைவு கொடியேற்று விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 1950 பிப். 11-ஆம் தேதி சேலம் மத்திய சிறையில் நிகழ்ந்த சம்பவத்தில் 22 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்நிகழ்வின் 75-ஆவது ஆண்டு நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. சிறை தியாகிகளின் நினைவைப் போற்றும் வகையில் கொடியேற்று விழா நடத்தப்பட்டது.
சேலம் மத்திய சிறை முன்பு சிபிஎம் வடக்கு மாநகர குழு சாா்பில், கிளைச் செயலாளா்கள் டி.மணிமுடி, பி.குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாநில செயற்குழு உறுப்பினா்கள் பாண்டி, எஸ்.முத்துக்கண்ணன், வடக்கு மாநகரச் செயலாளா் என்.பிரவீன் குமாா், கிழக்கு மாநகரச் செயலாளா் கே.பச்சமுத்து, மேற்கு மாநகரச் செயலாளா் பி.கணேசன், மேட்டூா் கொளத்தூா் ஒன்றியக் குழு செயலாளா் எஸ்.வசந்தி, எஸ்எப்ஐ மாவட்டச் செயலாளா் எஸ்.பவித்ரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.