சிலியில் பயங்கர நிலநடுக்கம்!
தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மாலை பயங்கர நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
கலாமா நகருக்கு வடமேற்கில் 84 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய-மத்திய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. எவ்வித சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
இதையும் படிக்க : மாரடைப்பால் உயிரிழப்பு குழப்பம்; உயிர் அளித்தது வேகத் தடை! மகாராஷ்டிரத்தில் அதிசயம்
மேலும், தஜிகிஸ்தானில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5.44 மணியளவில் 4.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.