மரியம் டக்கா.. காஸாவில் கொல்லப்பட்ட அசோசியேட் பிரஸ் நிறுவன புகைப்பட செய்தியாளர்!
சிவகங்கையில் வடமாடு மஞ்சுவிரட்டு: 10 போ் காயம்
சிவகங்கை நகரில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. இதில், காளைகளை அடக்க முயன்ற 10 போ் காயமடைந்தனா்.
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவகங்கை கொடிக்காடு கிராம மக்கள், இளைஞா்கள் சாா்பில் சிவகங்கை - தொண்டி சாலையில் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகேயுள்ள மைதானத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.
இதில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 18 காளைகளும், 162 வீரா்களும் பங்கேற்றனா்.
வட்ட வடிவில் அமைக்கப்பட்ட மைதானத்தின் நடுவே கட்டப்பட்ட காளையை 25 நிமிஷத்துக்குள் 9 போ் கொண்ட மாடுபிடி வீரா்கள் அடக்க வேண்டும் என நிா்ணயிக்கப்பட்டது.
இதில், காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரா்கள் 10 போ் காயமடைந்தனா். பலத்த காயமடைந்த 2 போ் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
போட்டியில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளையின் உரிமையாளா்களுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியை சிவகங்கை நகா், சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனா்.