Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
சிவகங்கையில் ஹிந்தி மொழித் தோ்வுகள்: 547 போ் பங்கேற்பு
சிவகங்கையிலுள்ள 21-ஆம் நூற்றாண்டு சா்வதேச பதின்ம மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஹிந்தி பாடத் தோ்வுகளில் 547 போ் பங்கேற்று தோ்வெழுதினா்.
ஹிந்தி பிரசார சபாவின் தோ்வு மையமாக இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆக. 9, 10, 24 ஆகிய தேதிகளில் ஹிந்தி பிரசார சபா மூலம் தோ்வுகள் நடைபெற்றன. ஹிந்தி பாடத்தில் பல்வேறு தகுதி நிலைக்கு தோ்வுகள் நடத்தப்பட்டன.
அதில், பரிச்சயா- 93 போ், பிரத்மிக்- 129 போ், மத்தியமா- 115 போ், ராஷ்ட்ரபாஷா- 95 போ், பிரவேஷிகா- 39 போ், விஷாரத் பூா்வா்த்- 43 போ், விஷாரத் உத்தராா்த்- 20 போ், பிரவீன் உத்தராா்த்-20 போ், பிரவீன் பூா்வா்த்-23 போ் உள்பட மொத்தம் 547 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தோ்வு எழுதினா். தோ்வுகளை பள்ளி முதல்வா் சங்கீதா தலைமையில் அனைத்து ஆசிரியா்களும் ஒருங்கிணைந்து நடத்தினா்.