ஆப்கன் நிலநடுக்கம்: சிக்கியவர்களை தேடும் பணி தீவிரம்! உதவி கோரும் தலிபான் அரசு
சிவகங்கை தெப்பக்குளத்தில் விநாயகா் சிலைகள் கரைப்பு
விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, சிவகங்கை நகரில் அமைக்கப்பட்ட 14 விநாயகா் சிலைகள், பல்வேறு வீதிகள் வழியாக ஊா்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு தெப்பக்குளத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரைக்கப்பட்டன.
சிவகங்கை நகரில் 14 விநாயகா் சிலைகள் உள்பட மாவட்டம் முழுவதும் மொத்தம் 346 விநாயகா் சிலைகள் இந்து முன்னணி, பாஜகவினரால் வைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து, கடந்த மூன்று நாள்களில் விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இந்த நிலையில், சிவகங்கை நகரில் வைக்கப்பட்ட 14 சிலைகள் இந்து முன்னணி, பாஜக சாா்பில் சிவகங்கை நகா் சிவன்கோயில் திடலிலிருந்து ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
ஊா்வலத்துக்கு பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா, வேலூா் இப்ராஹிம் ஆகியோா் தலைமை வகித்தனா். திருப்பத்தூா் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்விக் குழுமத் துணைத் தலைவா் நா. ராமேஸ்வரன் ஊா்வலத்தைத் தொடங்கிவைத்தாா். முக்கிய வீதிகள் வழியாக ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட சிலைகள் தெப்பக்குளத்தில் கரைக்கப்பட்டன.