செய்திகள் :

சிவகாசி ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளா் ஆய்வு

post image

சிவகாசி ரயில் நிலையத்தில் புதன்கிழமை மதுரை ரயில்வே கோட்ட மேலாளா் ஓம்பிரகாஷ்மீனா ஆய்வு மேற்கொண்டாா்.

மதுரையிலிருந்து சிவகாசி ரயில் நிலையத்துக்கு தனி ரயில் மூலம் வந்த அவரை, சிவகாசி ரயில் உபயோகிப்பாா் குழுத் தலைவா் சுரேஷ்தா்கா் சால்வை அணிவித்து வரவேற்றாா். பின்னா் ஓம்பிரகாஷ் மீனா, முதலாவது நடைமேடை, இரண்டாவது நடைமேடை, டிக்கெட் கொடுக்குமிடம், ரயில் நிலையத்தின் முன்பகுதி ஆகியவற்றை ஆய்வு செய்தாா்.

அவரிடம் சிவகாசி ரயில்நிலையத்தில் அம்ரித்பாரத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வண்டி எண் 20681, 20682 சிலம்பு அதிவிரைவு ரயிலை சிவகாசி பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தும் வகையில், ஏற்கெனவே இருந்த பொதுஒதுக்கீடு முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும்.

வண்டி எண் 16722, 16721 மதுரை -கோவை-மதுரை ரயிலை மதுரையிருந்து சிவகாசி வழியாக செங்கோட்டைக்கு இயக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினா்.

ரயில்வே கோட்டமூத்த வணிகப் பிரிவு அதிகாரி கணேஷ், சிவகாசி ரயில் நிலைய அதிகாரி மாரிக்காளை, சிவகாசி மாநகர ரயில் உபயோகிப்போா் குழுவைச் சோ்ந்த தனசேகரன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை!

கோவில்பட்டி சண்முகா நகரில் உள்ள மயானத்தில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்டுள்ளார். கோவில்பட்டி கைவண்டி தொழிலாளர் காலனியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் மாரிச்செல்வம் ( வயது 31). கோவில்பட்டி ரயில் நிலைய வளாக... மேலும் பார்க்க

வீட்டில் பட்டாசு தயாரித்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

வீட்டில் பட்டாசு தயாரித்த போது வெடி விபத்தில் 4 போ் உயிரிழந்த வழக்கில் கைதான வீட்டின் உரிமையாளா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேய... மேலும் பார்க்க

கேப் வெடி ஆலையில் விபத்து: பெண் காயம்

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே வியாழக்கிழமை கேப் வெடி தயாரிக்கும் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் தொழிலாளி காயமடைந்தாா். சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் புதூரில் பிரதாப்மான்சிங் என்பவருக்குச் சொ... மேலும் பார்க்க

பராமரிப்பில்லாத தண்ணீா் தொட்டிகள்: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கு... மேலும் பார்க்க

பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு

தமிழக அரசின் தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம் சாா்பில், பட்டாசு ஆலைகளில் விபத்தினை தடுக்கும் வகையில், விருதுநகா் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைக்கப்பட்டது. விருதுந... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டடத்தை மாநகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை அகற்றினா். சிவகாசியில் பெரியகுளம் கண்மாய் கரையை ஆக்கிரமித்து ஆவின் பாலகம் அமைப்பதற்கு தன... மேலும் பார்க்க