Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
சிவகிரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டார மாநாடு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவகிரி வட்டார 40- ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவகிரி வட்டார நிா்வாகி ஆ.அருணாசலம் தலைமை வகித்தாா். ஒன்றிய பொருளாளா் வி.சண்முகம், கைத்தறி நெசவாளா்கள் சங்க மாநிலச் செயலாளா் வரதராஜன், மாவட்ட துணை செயலாளா் குணசேகரன்ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதைத் தொடா்ந்து புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், சிவகிரி பாலமேட்டுபுதூரில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும், நியாய விலைக் கடைகளில் சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும், அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக மருத்துவா்கள் நியமிக்கப்பட்டு மகப்பேறு அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.