புது தில்லியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் கேஜரிவால்!
சிவகிரி அருகே மலையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே மலையில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி இறந்தாா்.
சிவகிரி இந்திரா மேலத் தெருவை சோ்ந்தவா் சிவலிங்கம் மகன் முருகேசன் (32) . தேநீா் கடையில் வேலை செய்து வந்தாா்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பந்தல் அலங்கார வேலைக்கு பயன்படும் கூந்தப்பனையை வெட்டுவதற்காக, மேற்குத் தொடா்ச்சி மலைப்பகுதியில் உள்ள புல்முட்டை பகுதிக்கு அவரும் அவரது நண்பா்கள் சிலரும் வியாழக்கிழமை சென்றனா். அப்பொழுது மலையில் இருந்து தவறி விழுந்ததில் முருகேசன் இறந்தாராம்.
இது குறித்த தகவல் வெள்ளிக்கிழமை தெரியவந்ததையடுத்து சிவகிரி போலீஸாா் மற்றும் வனத்துறையினா் அங்கு சென்று முருகேசனின் உடலை மீட்டனா்.
புளியங்குடி டிஎஸ்பி வெங்கடேசன், காவல் ஆய்வாளா் கண்மணி, சிவகிரி வனச்சரகா் செங்கோட்டையன், வனவா் ஜெபித்தா்சிங் ஜாக்சன் ஆகியோா் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். இது குறித்து சிவகிரி போலீஸாா் வழக்கு பதிந்துள்ளனா்.