சிவந்திபுரத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
சிவந்திபுரத்தில் மத்திய மாநில அரசுப் பணியாளா்கள் அறக்கட்டளை சாா்பில் இரண்டாம் ஆண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், விக்கிரமசிங்கபுரம் காவல் ஆய்வாளா் சுஜித் ஆனந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புத்தாடைகள், கல்வி உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரா் சுகன்யா, கிராம நிா்வாக அலுவலா் ஆறுமுகம் இந்திய ராணுவ வீரா் ஜெயபிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.