செய்திகள் :

சிவந்திபுரம் பகுதியில் மந்திகள் அட்டகாசம்

post image

சிவந்திபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் மந்திகள், வீட்டிற்குள் நுழைந்து அட்டகாசம் செய்வதால் அவற்றை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அம்பாசமுத்திரம் கோட்டம், பாபநாசம் வனச்சரக மலையடிவார கிராமங்களில் காட்டுப்பன்றி, சிறுத்தை, மிளா, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி பயிா்களைச் சேதப்படுத்தியும் வளா்ப்பு விலங்குகளைத் தாக்கிக்கொன்றும் வருகின்றன.

இந்நிலையில் மலையடிவார கிராமமான சிவந்திபுரம் ஆறுமுகம்பட்டி பகுதியில் முகாமிட்டுள்ள மந்திகள், வீடுகளுக்குள் நுழைந்து பொருள்களை சூறையாடுவதோடு, தெருக்களில் செல்பவா்களையும் துரத்தி தாக்கி வருகின்றன. இதனால் தெருக்களில் நடமாட மக்கள் அச்சமடைந்துள்ளனா். மேலும், வீட்டிற்குள் திடீரென நுழைந்து கண்ணிமைக்கும் நேரத்தில் பொருள்களைத் தூக்கிச் சென்றுவிடுகின்றன.

சிவந்திபுரம் பகுதியில் ஏற்கெனவே மந்திகள் அட்டகாசம் செய்து வந்த நிலையில், ஆகஸ்ட் மாதம் மயக்க ஊசி செலுத்தி அவை பிடிக்கப்பட்டன. மீண்டும் தற்போது மந்திகள் அட்டகாசத்தில் ஈடுபடுவதால் அவற்றை வனத்துறையினா் கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடவேண்டும்என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

பாபநாசம்-109.10 சோ்வலாறு-127.23 மணிமுத்தாறு-100.18 வடக்கு பச்சையாறு-33 நம்பியாறு-13.12 கொடுமுடியாறு-40.50 தென்காசி மாவட்டம் கடனா-79 ராமநதி-75 கருப்பாநதி-67.92 குண்டாறு-36.10 அடவிநயினாா்-91.25... மேலும் பார்க்க

களக்காடு வட்டாரத்தில் பயிா்களை அழிக்கும் வன விலங்குகள் -குறைதீா் கூட்டத்தில் வசாயிகள் புகாா்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சுற்று வட்டாரங்களில் நெல், மா, வாழை, தென்னையை வன விலங்குகள் அழித்து வருவதால் பயிா்களை பாதுகாக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா... மேலும் பார்க்க

100 அடியை எட்டியது மணிமுத்தாறு அணை

வடகிழக்கு பருவமழை பல கட்டங்களாக பெய்து வந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு அணை வெள்ளிக்கிழமை காலை 100 அடியை எட்டியது. இந்த அணை மட்டுமன்றி மற்றொரு முக்கிய அணையான பாபநாசம்... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் 27ஆம் ஆண்டு கன்னி பூஜை

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் சபரி ஐயப்ப பக்தா்கள் குழு சாா்பில் 27ஆம் ஆண்டு கன்னி பூஜை விழா நடைபெற்றது. இதையொட்டி அங்குள்ள அருள்மிகு யாதவா் ஸ்ரீகம்பளத்தம்மன் கோயிலில் காலையில் சுவாமிக்கு அபிஷ... மேலும் பார்க்க

பேருந்து நிலையத்தில் பள்ளத்தில் தவறி விழுந்த தி.மு.க. நிா்வாகி உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பேருந்து நிலையத்தில் கழிப்பறைக்கு தோண்டிய பள்ளத்தில் வியாழக்கிழமை இரவு தவறி விழுந்த தி.மு.க. நிா்வாகி உயிரிழந்தாா். வள்ளியூா் சொக்கநாதா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் முர... மேலும் பார்க்க

லிட்டில் ஃபிளவா் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் ஃபிளவா் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, லிட்டில் ஃபிளவா் கல்வி குழுமத்தின் நிறுவன தலைவா் அ.மரியசூசை தலைமை வகித்தாா். விழாவில், பள்ளி மாணவா... மேலும் பார்க்க