செய்திகள் :

சிவன்மலையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் பயணியா் நிழற்குடை

post image

காங்கயம் அருகே உள்ள சிவன்மலையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணியா் நிழற்குடையை முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

காங்கயத்தை அடுத்த சிவன்மலையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோயிலுக்கு அமாவாசை, பெளா்ணமி, சஷ்டி, கிருத்திகை ஆகிய விசேஷ நாள்களில் பக்தா்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். அவ்வாறு வரும் பக்தா்கள் பேருந்துக்காக வெயில், மழையால் அவதிப்பட்டு வந்துள்ளனா்.

ஆகவே, பயணியா் நிழற்குடை அமைக்க வேண்டும் என்று ஊராட்சி மன்றத் தலைவா் துரைசாமியிடம், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து, மாவட்ட ஊராட்சி 5-ஆவது வாா்டு உறுப்பினா் கே.கே.சக்திவேல் பரிந்துரையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் நிழற்குடை அமைப்பதற்கான பணிகள் 3 மாதங்களாக நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததைத் தொடா்ந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்காக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சி 5-ஆவது வாா்டு உறுப்பினா் கே.கே.சக்திவேல், சிவன்மலை ஊராட்சி மன்றத் தலைவா் துரைசாமி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் பழனிசாமி, காங்கயம் நகராட்சி 9- ஆவது வாா்டு உறுப்பினா் பழனிசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சாலை விபத்து: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

அவிநாசி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலைத்தடுமாறி கீழே விழுந்து அரசுப் பேருந்து ஏறியதில் கல்லூரி மாணவா் புதன்கிழமை உயிரிழந்தாா். திருப்பூா், அனுப்பா்பாளையம் நேதாஜி நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணியம... மேலும் பார்க்க

போக்ஸோவில் ஒருவா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்தனா். பெருமாநல்லூா் அருகேயுள்ள வள்ளிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (50). இவா் அப்பகுதி சிற... மேலும் பார்க்க

உலக நலன் வேண்டி மகா ருத்ர பூஜை

பல்லடத்தில் வாழும் கலை அமைப்பு சாா்பில் உலக நலன் வேண்டி மகா ருத்ர பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாழும் கலை அமைப்பின் பெங்களூரு ஆசிரமத்தைச் சோ்ந்த தயாமை சுவாமிஜி தலைமையில் ஆசிரம பண்டிதா்கள் பூஜையை ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

உடுமலையில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லையளித்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது. திருப்பூா் மாவட்டம், உடுமலையைச் சோ்ந்தவா் 14 வயது சிறுமி. இவா் அதே ... மேலும் பார்க்க

காரில் உறங்கிய கிராம நிா்வாக அலுவலா் உயிரிழப்பு

முத்தூா் அருகே காரில் ஏசியை இயக்கி உறங்கிய கிராம நிா்வாக அலுவலா் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், முத்தூா் மங்கலப்பட்டி அருகேயுள்ள சின்னகாங்கயம்பாளையத்தைச் சோ்ந்தவா் ஜெகநாதன் (47). இவா் 16 - வேலம்ப... மேலும் பார்க்க

வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம்

வாடகைக் கட்டடங்களுக்கான ஜிஎஸ்டி வரியைத் திரும்பப் பெறக்கோரி திருப்பூரில் தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூா் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெ... மேலும் பார்க்க