சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
திண்டுக்கல்: திண்டுக்கல் பகுதியிலுள்ள சிவன் கோயில்களில் புதன்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு, திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா், காளஹஸ்தீஸ்வரா் சந்நிதிகளிலும், ரயிலடி சித்தி விநாயகா் கோயிலில் அமைந்துள்ள கைலாசநாதா், நத்திகேஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதேபோல, முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயில், வடமதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரா் திருக்கோயில், தவசிமடை மகாலிங்கேஷ்வா் திருக்கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி திருக்கோயில், கசவனம்பட்டி மெளனகுருசாமி திருக்கோயில், காரமடை ராமலிங்க சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.