செய்திகள் :

சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

post image

கங்கை கொண்ட சோழபுரத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இளையாராவை பிரதம் மோடி மிகவும் பாராட்டி பேசியுள்ளார்.

கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் நிறைவு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில், இசையமைப்பாளர் இளையராஜா தன் குழுவினருடன் திருவாசகத்திற்கு புதிய இசையமைத்து கலை நிகழ்ச்சியையும் நடத்தினார்.

தொடக்கமாக, ஓம் சிவோஹம் என்ற பாடலை இளையராஜா இசையமைத்து முடிக்கும்போது பிரதமர் மோடி எழுந்து நின்று மரியாதை செய்தார். அடுத்து, விழாவில் சோழீஸ்வரருக்கு திருவாசகம் சிம்பொனியையும் இளையராஜா இசைத்தார்.

பார்வையாளர்கள் அனைவரும் ராஜாவின் இசையில் மெய் மறந்து ரசித்தனர். பிரதமர் மோடியும் அதனை ரசித்து பார்த்தார்.

சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா

வணக்கம் சோழ மண்டலம். நமச்சிவாயா. நாதன் தாள் வாழ்க எனப் பேச்சைத் தொடக்கினார்.

இளையராஜாவின் 20 நிமிட இசை நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:

இது ராஜராஜ சோழனின் இடம். இந்த இடத்திலேயே என்னுடைய நண்பரான இளையராஜாவின் இசை நம்மை சிவ பக்தியில் ஆழ்த்தியது.

நான் காசியின் எம்.பி. ஆனால், இங்கு இந்த ஓம் நமச்சிவாயா என்ற கோஷங்களைக் கேட்கும்போது என் உடலெல்லாம் புல்லரிக்கிறது.

ஆடி மாதத்திலே ராஜராஜ சோழனின் தரிசனத்துக்குப் பிறகு இளையராஜாவின் இசையும் மந்திரங்களைக் கேட்டு ஓர் ஆன்மிக அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் அடைந்தேன்.

பெருமை கொள்கிறேன்

140 கோடி மக்களின் நலனுக்காக இறைவன் சன்னதியில் வேண்டினேன். சோழர்கள் குறித்த கண்காட்சியை கண்டு பிரமித்துப் போனேன்.

இந்தச் சோழர்கள் தங்களது வியாபாரத்தை இலங்கை, மாலத்தீவு, தெற்காசியா வரை நீட்டிருந்தார்கள். நான் நேற்றுதான் மாலத்தீவில் இருந்து திரும்பி வந்தேன். இன்று, இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்றதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி தழிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்கப்படும் என்ற பெரும் அறிவிப்பை வெளியிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

Prime Minister Narendra Modi on Sunday participated in the valedictory function at the 'Aadi Thiruvathirai' Festival on the occasion of the birth anniversary of King Rajendra Chola I at the Gangaikonda Cholapuram Temple in Tamil Nadu's Ariyalur.

முதல்வர் ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்குச் செல்லாததற்கு இதுதான் காரணமாம்..!

சென்னை: தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் அரசு மருத்துவமனைக்குச் செல்லாததற்கு என்ன காரணம் என்பதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.முதல்வர் மு. க. ஸ்டாலின் கடந்த சில நாள்களுக்கு முன்னர் உ... மேலும் பார்க்க

தொடர் மழையால் முடங்கிய உதகை: முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடல்!

நீலகிரி மாவட்டம், உதகையில் தொடா்ந்து பெய்துவரும் கனமழையால் இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்கள் 4-ஆவது நாளாக மூடப்பட்டுள்ளன. மழையுடன் பலத்த வேகத்தில் காற்றும் வீசுவதால் தொட்டபெட்டா, பைன் மரக் காடு உள்ள... மேலும் பார்க்க

தில்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

திருச்சியில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி தில்லி புறப்பட்டார். மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு 2 நாள் பயணமாக பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு தமிழகம் வந்தடைந்தார். அவரை விமான நிலையத்தில் ஆளுநர்... மேலும் பார்க்க

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க