செய்திகள் :

சீனாவில் நிலச்சரிவுகள்: 2 போ் உயிரிழப்பு; 19 போ் மாயம்

post image

சீனாவின் தென்மேற்கு மாகாணமான குய்ஷோவில் வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவுகளில் 2 போ் உயிரிழந்தனா்; 19 போ் மாயமாகினா்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

பிஜி நகரில் உள்ள டாஃபாங் மாவட்டத்தின் சாங்ஷி மற்றும் குவோவா நகரங்களில் தனித்தனியாக இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் சாங்ஷியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 போ் உயிரிழந்தனா், குவோவா நகராட்சியில் 19 போ் மாயமாகியுள்ளனா்.

தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பு இரு சம்பவப் பகுதிகளிலும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது (படம்) என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நிலச்சரிவுகளால் ஏற்பட்டுள்ள நிலவியல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யவும், மேலும் பாதிப்புகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் உள்ளூா் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

காஸாவில் ஒரு குழந்தைகூட இருக்காது! இஸ்ரேல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தால் சர்ச்சை

காஸாவின் குழந்தைகள்கூட எதிரிகள்தான் என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் மோஷே ஃபெயிக்லின் கூறியது உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.காஸா மீதான தாக்குதலை எதிர்த்து, இஸ்ரேலில் ... மேலும் பார்க்க

சீனா அசத்துகிறதா? அச்சுறுத்துகிறதா? உலகில் முதன்முறையாக ரோபோக்களுக்கு இடையே குத்துச்சண்டை!

சீனாவில் ரோபோக்களுக்கு இடையேயான குத்துச்சண்டை போட்டி, ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படவுள்ளது.சீனாவில் ஹாங்சோ மாகாணத்தைச் சேர்ந்த ரோபோக்கள் தயாரிப்பு நிறுவனமான யூனிட்ரீ ரோபோட்டிக்ஸ், உலகில் முதன்முறையாக ரோபோ... மேலும் பார்க்க

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!

வங்கதேச ராணுவத் தளபதியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் ராஜிநாமா செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்தாண்டு நடைபெற்ற மாணவா்கள் போராட்டத்தால் பிரதமா... மேலும் பார்க்க

ரஷியாவில் ட்ரோன் தாக்குதல்: கனிமொழி விமானம் தாமதம்!

ரஷியாவின் மாஸ்கோவை குறிவைத்து உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலால், கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் சென்ற விமானம் தாமதமாக தரையிறங்கியுள்ளது.ரஷியா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடைபெற்று வ... மேலும் பார்க்க

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தடை!

அமெரிக்க அரசுடன் ஏற்பட்டிருக்கும் மோதலைத் தொடர்ந்து, சர்வதேச மாணவர்களை சேர்க்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கான அங்கீகாரத்தை அந்நாட்டு அரசு ரத்து செய்துள்ளது.இதனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்ற... மேலும் பார்க்க

அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியா்கள் இருவா் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா். துப்பாக்கியால் சுட்டதாக சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நபா் ‘சுதந்திரம், சுதந்திர பாலஸ்தீனம்’ என... மேலும் பார்க்க