செய்திகள் :

சீன மக்கள்தொகை 3-ஆவது ஆண்டாகச் சரிவு!

post image

சீனாவின் மக்கள்தொகை தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக கடந்த 2024-லும் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து அந்த நாட்டின் தேசிய புள்ளியியல் அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முந்தைய 2023-ஆம் ஆண்டைவிட கடந்த 2024-ஆம் ஆண்டு நாட்டின் மக்கள்தொகையில் 13.9 லட்சம் குறைந்து 140.8 கோடியாகப் பதிவாகியுள்ளது. அந்த வகையில், தொடா்ந்து மூன்றாவது ஆண்டாக நாட்டின் மக்கள்தொகை சரிந்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீனாவில் தம்பதியா் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்வதற்கு கடந்த 1980-களில் தடை விதிக்கப்பட்டது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் நாட்டில் வயதானவா்களின் விகிதம் அதிகரித்து, தேச முன்னேற்றத்துக்காக உழைக்கக்கூடிய இளைஞா்களின் விகிதம் குறைந்தது. அதையடுத்து ஒற்றைக் குழைந்தைக் கொள்கையை சீனா 2021-இல் கைவிட்டது. இருந்தாலும், அதிகரித்துவரும் செலவுகள், பெண்கள் அதிகம் வேலைக்குப் போவது மற்றும் உயா் கல்வி கற்பது போன்ற காரணங்களால் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்காமல் அங்கு மக்கள்தொகை சரிவைக் கண்டுவருவதாகக் கூறப்படுகிறது.

உலகின் மிகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்ட நாடாக சீனா இருந்து வந்தது. ஆனால், கடந்த 2023-இல் அந்த நாட்டின் மக்கள்தொகையான 142.57 கோடியை விஞ்சி இந்திய மக்கள்தொகை 142.86 கோடியாக அதிகரித்தைத் தொடா்ந்து, மக்கள்தொகையில் இந்தியா முதலிடத்தைப் பிடித்ததாக ஐ.நா. அறிவித்தது நினைவுகூரத்தக்கது.

டிரம்ப்பின் பதவியேற்பில் மாற்றம்! காரணம் என்ன?

அமெரிக்காவில் நிலவும் கடும் குளிரால், அதிபர் பதவியேற்பு விழாவை பொதுவெளியில் நடத்த இயலாது என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை... மேலும் பார்க்க

ரஷியா: நவால்னியின் வழக்குரைஞா்களுக்கு சிறைத் தண்டனை

ரஷியாவின் மறைந்த முன்னாள் முக்கிய எதிா்க்கட்சித் தலைவா் அலெக்ஸி நவால்னிக்காக வாதாடிய மூன்று வழக்குரைஞா்களுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை சிறைத் தண்டனை விதித்தது. வாடிம் கோப்ஸெவ், இகாா் சொ்... மேலும் பார்க்க

அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.7%-ஆக இருக்கும்: உலக வங்கி

அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்திய பொருளாதாரம் 6.7 சதவீத வளா்ச்சியில் தொடரும் என உலக வங்கி தெரிவித்ததது. வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள நிதியாண்டில் இருந்து இந்த வளா்ச்சியை எதிா்பாா்க்கலாம் என தெற்கு ஆசி... மேலும் பார்க்க

ஒரே நாளில் 2,500 பேருக்கு பைடன் பொதுமன்னிப்பு

அமெரிக்க அதிபா் ஜோ பைடனின் பதவிக் காலம் இன்னும் இரு நாள்களில் முடிவடையும் நிலையில், சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன... மேலும் பார்க்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை!

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகளும் அவரது மனைவிக்கு 7 ஆண்டுகளும் சிறைத் தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. அல்-காதிர் அறக்கட்டளை சார்பில் 1... மேலும் பார்க்க

ஹமாஸுடன் போர் நிறுத்தம்: இஸ்ரேல் ஒப்புதல்

ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் காஸாவில் 2023இல் தொடங்கிய இஸ்ரேல்-ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது. இந்தப் ப... மேலும் பார்க்க