சீமான் கருத்து - நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
சீமான் தொடர்பான மனுதாரரின் புகாரை பெற்று நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
பெரியார் குறித்து அவதூறாக பேசிய சீமான் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுத்து அறிக்கையை ஜனவரி 20ஆம் தேதி தாக்கல் செய்யவும் நீதிமன்றம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
தண்டனையை ஏற்கத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் ஸ்டாலின் சவால்!
கடலூரில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான், பெரியாா் குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது பேச்சுக்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதைக் கண்டித்து திராவிடா் இயக்கம், பெரியாரிய இயக்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே இந்த விவகாரத்தில் சீமானின் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.