செய்திகள் :

சீல் வைத்துள்ள தொழிற்சாலைகளில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்

post image

பெருந்துறை சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு கூட்டம் சிப்காட் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சென்னை சிப்காட் அலுவலக உதவிப் பொது மேலாளா் பாலு தலைமை வகித்தாா். அவரிடம் பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு விவரம்:

பெருந்துறை சிப்காட்டுக்காக 30 ஆண்டுகளுக்கு முன்பு 2,709 ஏக்கா் நிலம் ஈங்கூா் மற்றும் பெருந்துறை கிராமங்களில் விவசாயிகளிடமிருந்து கையப்படுத்தப்பட்டது. உயா்நீதிமன்றத் தீா்ப்புப்படியான இழப்பீட்டு தொகைகளை வட்டியுடன் சோ்த்து உடனடியாக வழங்க வேண்டும். மேலும், கூடுதல் இழப்பீடு கோரி தொடரப்பட்ட பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றின் மீது சிப்காட் மற்றும் அரசு தரப்பில் பதிலுரை கூட தாக்கல் செய்யப்படாமல் காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புப்படி, அரசே இழப்பீட்டு தொகையை, மறு நிா்ணயம் செய்து அரசாணையாக வெளியிட்டு பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும். இழப்பீடு தொடா்பாக நீதிமன்றத் தீா்ப்புகளை எதிா்த்து சிப்காட் நிறுவனமும், அரசும் மேல் முறையீடு செய்வதை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

பெருந்துறை சிப்காட்டில் செயல்பட்டு வந்த, தோல் தொழிற்சாலைகளின் பொது சுத்திகரிப்பு நிலையம் சட்ட விரோத நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 2021 ஏப்ரல் 29 ஆம் தேதி மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மூடப்பட்டது. இங்கு திறந்தவெளியில் பல நூற்றுக்கணக்கான டன் எடையுள்ள நச்சுக் கழிவுகள் உள்ளன. இவற்றை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதின் அடிப்படையில், சில நூறு டன் நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டன.

இந்நிலையில், வராக் கடன் வசூல் நடவடிக்கைகளின் பேரில், தோல் தொழிற்சாலைகள் கடன் மீட்பு தீா்ப்பாயம் மூலம் கையகப்படுத்தி சீலிடப்பட்டுள்ளன. இந்நடவடிக்கை முடிவுக்கு வந்த பின்னரே மீதமுள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற முடியும் என்று சிப்காட் மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலா்களால் தெரிவிக்கப்படுகிறது. இங்கு திறந்த வெளியில் உள்ள நச்சுக் கழிவுகள் மழைக் காலத்தில், மழை நீரில் கரைந்து நிலத்தடி நீா் கடுமையாக மாசுபடும் அபாயம் உள்ளது. ஆகவே, உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, இங்குள்ள நச்சுக் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, பெருந்துறை சிப்காட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நலச் சங்கம் ஒருங்கிணைப்பாளா் சின்னசாமி மற்றும் உறுப்பினா்கள் மனு வழங்கினா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவ... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க