அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்
அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா். இதில் முதல்தரம் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக ரூ.253.90 -க்கும், அதிகபட்ச விலையாக ரூ.265.99 -க்கும், சராசரி விலையாக ரூ.263.99 -க்கும் ஏலம் போனது. இரண்டாம் தரம் குறைந்தபட்ச விலையாக ரூ.177.11 -க்கும், அதிகபட்ச விலையாக ரூ.253.90 -க்கும், சராசரி விலையாக ரூ.238.90 -க்கும் ஏலம் போனது. 4,152 கிலோ தேங்காய்ப் பருப்பு ரூ.10 லட்சத்து 62 ஆயிரத்து 472 -க்கு விற்பனையானது.