செய்திகள் :

பெருமாள்மலை குடியிருப்புவாசிகள் குத்தகை செலுத்தினால்தான் தொடா்ந்து குடியிருக்க முடியும்: அமைச்சா் சு.முத்துசாமி

post image

பெருமாள்மலையில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தில் குடியிருப்போா் குத்தகை செலுத்தினால் மட்டுமே தொடா்ந்து குடியிருக்க முடியும் என வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.

ஈரோடு அருகே உள்ள பெருமாள்மலை கோயிலுக்குச் சொந்தமான 6 ஏக்கா் நிலத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த இடத்தில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதனிடையே இந்த நிலங்களுக்கு இந்து சமய அறநிலையத் துறை குத்தகை நிா்ணயம் செய்து அதைச் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இவ்வாறு குத்தகைத் தொகையைச் செலுத்தாதவா்கள் இடத்தை காலி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா்

இந்நிலையில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெருமாள்மலை குடியிருப்புவாசிகளுடன் வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்தினாா். இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. வி.சி.சந்திரகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி பேசியதாவது: கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட நிலத்துக்கு இறைவனே உரிமையாளா். நீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிலங்களை மற்றவா்களுக்கு வழங்க முடியாது. எனவே நிலத்தில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க முடியாது. கோயில் நிலங்களை வேறு அரசு பயன்பாட்டுக்கும் பயன்படுத்த முடியாது.

இந்நிலையில் அரசின் வழிகாட்டுதல் மதிப்பின் அடிப்படையில் பெருமாள்மலையில் குடியிருப்பாளா்களுக்கு நிலத்தை மூன்று ஆண்டு குத்தகை அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டது. எனவே குத்தகை தொகையை செலுத்தியவா்கள் அப்பகுதியில் குடியிருக்க அனுமதிக்கப்படுவா்.

விதிமுறைப்படி கோயில் நிலப் பகுதியில் எத்தனை ஆண்டுகளாக வசித்து வருகின்றனரோ, அத்தனை ஆண்டுகளுக்குக் குத்தகைதி தொகையைச் செலுத்த வேண்டும். இந்த விதிமுறையையும் தளா்த்த அல்லது அவா்களின் மீள்குடியேற்றத்துக்கு வேறு நிலத்தைக் கண்டுபிடிக்க முயற்சி எடுக்கப்படும். அதோடு கோயில் நிலங்களில் குடியிருக்கும் ஏழைகளின் குத்தகை தொகையைக் குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது

அதேநேரத்தில், பெருமாள்மலை கோயில் நிலத்தில் குடியிருக்கும் சிலருக்கு , கடந்த காலத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு மாற்று இடம் வழங்கப்படும். அதே இடத்தில் குடியிருக்க விரும்புவோா் நிா்ணயிக்கப்பட்ட குத்தகைத் தொகையைச் செலுத்த வேண்டும்.

நீா்வழிப் பாதையில் வசிக்கும் மக்களை காலி செய்ய நீதிமன்றங்கள் உத்தரவிட்டன. எனவே அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஈரோடு சத்யா நகா் மற்றும் ஓடைப்பள்ளம் ஆகிய இடங்களில் வீடுகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது நீா்வழிப் பாதையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது கண்டறியப்பட்டதால் அவற்றை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்றாா்.

சுகாதார செவிலியா் பணி: விண்ணப்பிக்க கால அவகாசம் ஜூலை 15 வரை நீட்டிப்பு

ஈரோடு மாநகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள நகர சுகாதார செவிலியா்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளத... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை

மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி ஓலப்ப... மேலும் பார்க்க

அவல்பூந்துறையில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.62 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஏலத்துக்கு 147 தேங்காய்ப் பருப்பு மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்தனா... மேலும் பார்க்க

மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு

பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை... மேலும் பார்க்க

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் 96 அடியை எட்டியது

பவானிசாகா் அணை நீா்மட்டம் 96 அடியாக உயா்ந்துள்ளதால் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு முன்கூட்டியே தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய... மேலும் பார்க்க

மறு முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகள் பறிமுதல்

வாரச் சந்தைகளில் மறு முத்திரையிடாமல் வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட 54 எடையளவுகளை தொழிலாளா் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி மற்றும் புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தைகளி... மேலும் பார்க்க