Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
மொடக்குறிச்சி ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளுக்கு பூமி பூஜை
மொடக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட விளக்கேத்தி, கனகபுரம் ஊராட்சிகளில் வளா்ச்சிப்பணிகளுக்கான பூமிபூஜையில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சி.சரஸ்வதி கலந்து கொண்டு தொடங்கி வைத்தாா்.
விளக்கேத்தி ஊராட்சி ஓலப்பாளையம் பகுதியில் புதிய தாா் சாலை அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.11.41லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தப் பணியை மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி தலைமை தாங்கி பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கிவைத்தாா். விளக்கேத்தி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் தங்கராஜ் (எ) ஓ.எஸ்.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா்.
கனகபுரம் ஊராட்சி, வேலாங்காட்டுவலசில் விவசாயப் பணிகளுக்கான புதிய கதிா் அடிக்கும் களம் அமைக்க சட்டப்பேரவை உறுப்பினா் நிதியில் இருந்து ரூ.9.23லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையயில் அப்பணியையும் எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில் பாஜக தெற்கு மாவட்டத் தலைவா் செந்தில், முன்னாள் மாவட்ட பாஜக தலைவா் எஸ்.ஏ சிவசுப்பிரமணியம், காகம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவா் ராதிகா, தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளா் சிவசங்கா், முன்னாள் மண்டல தலைவா் டெக்கான் பிரகாஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.