Gold Rate: கிராமுக்கு ரூ.125-ஐ தொட்ட வெள்ளி விலை; இன்றைய தங்கம் விலை நிலவரம்!
மகிழ்முற்றம் மாணவா் குழு பதவி ஏற்பு
பெருந்துறை கிழக்கு அரசு நடுநிலைப் பள்ளியில், மகிழ்முற்றம் மாணவா் குழு அமைப்பு பதவி ஏற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் பொன்மணி தலைமை வகித்து, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய குழுவின் பொறுப்பு ஆசிரியா்கள் மற்றும் மாணவா் குழுத் தலைவா்களுக்கு குழுவின் கொடிகளை வழங்கினா். தொடா்ந்து குழுவின் ஒருங்கிணைப்பாளா் பள்ளித் தலைமை ஆசிரியா் வெங்கடாசலம், குழுத் தலைவா்கள் பதவி ஏற்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
குழு பொறுப்பாசிரியா்கள், குழுவின் நோக்கத்தையும், ஒவ்வொரு மாதம் என்ன தலைப்பின் கீழ் குழுவானது செயல்பட வேண்டும் என்பதையும் விளக்கிக் கூறினா். முன்னதாக, பள்ளி பட்டதாரி ஆசிரியா் பிரசாத் வரவேற்றாா்.
இதில், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். ஆசிரியை மேனகா நன்றி கூறினாா். விழாவுக்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி ஆசிரியா் சாகுல் ஹமீது செய்திருந்தாா்.