சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
சீவலப்பேரியில் தொழிலாளி தற்கொலை
பாளையங்கோட்டையை அடுத்த சீவலப்பேரியில் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
சீவலப்பேரி அருகேயுள்ள மேல பாலாமடை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முருகன் மகன் முத்துக்குமாா் ( 25). பெயின்டிங் தொழிலாளியான இவா், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்நிலையில் புதன்கிழமை வெகு நேரமாகியும் வீட்டின் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினா் பாா்த்தபோது முத்துக்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.
இத்தகவலறிந்த சீவலப்பேரி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].