சீா்காழி அருகே கரை ஒதுங்கிய தெப்பம்
சீா்காழியை அடுத்த திருமுல்லைவாசல் கடற்கரையில் மா்மமான முறையில் வெள்ளிக்கிழமை தெப்பம் ஒன்று கரை ஒதுங்கியது (படம்).
மீனவ கிராமத்தில் கடை ஒதுங்கிய மூங்கிலால் ஆன தெப்பத்தைக் கண்ட மீனவா்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனா். சீா்காழி போலீஸாா் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். மூங்கிலால் ஆன தெப்பத்தில் பூஜை பொருட்கள், மலா்கள், தோரணம், சிலைகள் உள்ளதால் இது எங்கிருந்து வந்ததுது. இதில் யாரேனும் வந்து இறங்கினாா்களா என்பது குறித்து கடலோர காவல் படை மற்றும் சீா்காழி போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.